இல்லத்தரசிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, காலையில் என்ன சமைப்பது என்று யோசிப்பது தான். இதனால் தான் பாதி பேர், இட்லி அல்லது தோசையை மட்டும் சமைத்து விடுவார்கள். இட்லி அல்லது தோசையை வாரத்தில் ஒரு முறை சமைத்தால் பிரச்சனை இல்லை. ஆனால் வாரம் முழுவதும் இட்லி அல்லது தோசையை மட்டும் சமைத்தால் உடலுக்கு தீங்கு தான். மாறாக உடல் எடை தான் கூடும். இனி நீங்கள் அப்படி என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு பட்டியலை பார்த்து நீங்கள் சுலபமாக என்ன சமைப்பது என்று முடிவு செய்து விடலாம்.
உப்புமா: உப்புமாவில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் ரவையில், காய்கறிகள், மசாலா பொருட்கள் மற்றும் முந்தரி போன்ற நட்ஸ் சேர்ப்பதால் இது ஆரோக்கியமான காலை உணவாக இருக்கிறது. மேலும், நீங்கள் உப்மாவை கோதுமை ரவையிலும் செய்யலாம். இது உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
அடை: அரிசி மற்றும் ப்ரோடீன் அதிகம் நிறைந்த பருப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு சுவையான தோசை தான் அடை. சாதாரண அரிசி தோசையை விட, அடை தோசையில் ப்ரோடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால், இதை விட ஆரோக்கியமான காலை உணவு இருக்க முடியாது.
வடை: வடை காலை உணவா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது தான் உண்மை. வடையை மட்டும் தனியாக சாப்பிடும் போது, அது ஒரு நல்ல காலை உணவாக அமைகிறது. ஆனால் வடையுடன், இட்லி, பொங்கல், டீ என அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலில் அதிக கலோரிகள் ஏறிவிடும். இதனால் நமது எடை அதிகரிக்கும். இதனால் உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு மற்றும் வெங்காயம் சேர்த்து தயாரிக்க்கும் வடையை மட்டும் சாம்பார் மற்றும் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ப்ரோடீன் கிடைத்து விடும்.
பொங்கல்: மிளகு, சீரகம், இஞ்சி, நெய் மற்றும் முந்திரி சேர்த்து சமைக்கும் பொங்கல் ஒரு சத்தான காலை உணவு. இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். நீங்கள் வரகு, சாமை, குதிரைவாலி போன்ற அரிசிகளிலும் பொங்கல் செய்து சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.
உளுந்து களி: களியில் அதிக அளவு கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது. உளுந்து களி சாப்பிடுவதால், உங்கள் எலும்பு பலப்படுகிறது. மேலும், இது மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றக்கு சிறந்த மருந்தாக இருக்கும். உளுந்து சேர்ப்பதற்கு பதில், நீங்கள் வெந்தயம், ராகி ஆகியவற்றிலும் களி செய்து சாப்பிடலாம்.
தோசை: புளித்த அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு வைத்து தயாரிக்கப்படும் தோசை ஒரு நல்ல சத்தான காலை உணவு. இதில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், ப்ரோடீன், புரோபயாடிக்குகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நீங்கள் தோசையை தாராளமாக சாப்பிடலாம்.
இட்லி: புளித்த அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இட்லியில், குறைந்த கலோரிகள் உள்ளது. மேலும், இதில் ப்ரோடீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளது. நீங்கள் அரிசிக்கு பதில் ராகி, திணை ஆகியவை பயன்படுத்தியும் இட்லி சமைக்கலாம்.
Read more: இனி சப்பாத்தி சுடும் போது ஒரு ஸ்பூன் நெய் தடவுங்க… கேன்சரை கூட தடுக்கலாமாம்..