fbpx

கெமிக்கல் கலந்த ஹேர் டை வேண்டாம்; இயற்கையான இந்த ஹேர் டை பயன்படுத்தி பாருங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே நரை முடி வந்து விடுகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருந்தாலும், நரை முடி வந்த உடன் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இது இளம்வயது உடையவர்களுக்கு மட்டும் இல்லை, வயதானவர்களுக்கும் தான். என்ன தான் வயதானாலும் தங்களின் முடி வெள்ளையாக இருக்க விரும்புவதில்லை. யாருக்கு தான் வயதான தோற்றத்துடன் இருக்க பிடிக்கும். நாம் நரை முடி இருக்க கூடாது என்று நினைப்பது சரி தான். ஆனால் அதற்காக கெமிக்கல் நிறைந்த டையை பயன்படுத்துவதால் புற்று நோய், கண் பார்வை இழப்பு போன்ற பல ஆபத்துக்கள் நேரிடும். அப்போது வேறு வழியே இல்லையா என்று கேட்டல்.. வழி உள்ளது. பக்கவிளைவுகள் இல்லாமல் உங்கள் கூந்தலுக்கு நீங்கள் டை அடித்து கொள்ளலாம். எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மருதாணி பொடி: இது பலருக்கு தெரிந்த ஒன்று தான். மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் விட்டுவிடுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் கூந்தலை அலசிவிடுங்கள். இப்போது இந்த மருதாணி, உங்கள் தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

காபி: முதலில் காபியை நன்றாக காய்ச்சி ஆற வைத்துவிடுங்கள். நன்கு ஆறிய பின், அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். இப்போது தலைமுடியை அலசிவிடுங்கள். இப்போது காபி, உங்கள் தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

அவுரி: முதலில் அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கொள்ளுங்கள். இப்போது இதை தலை முடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைத்துவிடுங்கள். பின்னர் முடியை தண்ணீரில் கழுவி விடலாம். இப்போது அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை கொடுக்கும்.

Maha

Next Post

காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர்!… எளிய வாழ்க்கையால் மக்களை கவர்ந்த முதல்வரின் நினைவு தினம் இன்று!

Mon Oct 2 , 2023
பெருந்தலைவர், கிங் மேக்கர், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரின் எளிய வரலாற்றுக் குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் […]

You May Like