ஒரு சிலருக்கு மூட்டு வலி, மற்றும் முதுகு வலி அதிகம் இருக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அவதி படுவார்கள். குறிப்பாக, இந்த பிரச்சனை பெண்களுக்கு இருக்கும். இதற்க்கு எத்தனை மாத்திரை மருந்து சாபிட்டலும் கொஞ்ச நாள் குணமாகும், ஆனால் மீண்டும் வந்து விடும். இதற்க்கு நிரந்தர தீர்வு என்பது நமது உணவில் தான் உள்ளது. இப்படி உங்களுக்கும் தீராத வலிகள் இருந்தால், இனி மாத்திரைகளை தூக்கி போட்டு விட்டு, இந்த கஞ்சியை சாப்பிட்டு பாருங்கள்..
இந்த காஞ்சி செய்ய, முதலில் ஒரு கடாயில் அரை கப் அளவிற்கு கேழ்வரகை போட்டு, மீடியம் பிளேமில் வைத்து வறுக்கவும். கேழ்வரகின் கலர் சற்று மாறி, நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வறுத்த கேழ்வரகை நன்கு ஆறவைத்து விடுங்கள். இப்போது அதே கடாயில், கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து சேர்த்து, அதையும் வாசம் வரும் வரை வறுத்து விடுங்கள். இப்போது வறுத்த கேழ்வரகு, உளுந்து ஆகியவை சேர்த்து, அதனுடன் இரண்டு ஏலக்காய், சின்னதுண்டு சுக்கு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது, ஐந்து கப் தண்ணீரில் இந்த மாவை சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும். பின்னர் இதனை அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் கஞ்சி பதத்திற்கு காய்ச்சி, அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து விடுங்கள். பின்னர், அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விட்டால் உளுந்து கஞ்சி ரெடி.. இதை காலையில், டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால், இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி என எல்லா பிரச்சனையும் சரியாகி விடும். இந்த காஞ்சி ரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
Read more: ஒரு மாசம் வர்ற கேஸ் 2 மாசம் வரணுமா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க…