மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக – சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இன்று பதிவியேற்றார். அவருடன், அக்கட்சியின் தேசிய தலைவரான சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திலீப் வால்ஸ்-பாட்டீல், மூத்த தலைவர்கள் சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.