தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக #GetOut என வைக்கப்பட்ட பேனரில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அதில் கையெழுத்திட்டனர்.
தவெக 2-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு திருக்குறள் நூல் மற்றும் தந்தை பெரியார் சிலையை வழங்கி கௌரவித்தார் தவெக தலைவர் விஜய். இந்த நிகழ்வில் பேசிய பிரசாந்த் கிஷோர் வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது உரையைத் தொடங்கினார். பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
தவெக அரசியல் கட்சி அல்ல. பல லட்சம் பேர் இணைந்த இயக்கம். விஜய் தலைவர் மட்டுமல்ல தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம். தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மிகப்பெரிய மாற்றத்திய ஏற்படுத்தும். தவெக தொண்டர்களின் தேர்தல் பணிக்கு நான் உறுதுணையாக இருப்பேன். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை நான் செய்யவில்லை.. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன்.
அதே போல் மேற்கு வங்கத்திலும் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். அதன் பிறகு யாருக்கும் தேர்தல் பணியாற்றவில்லை. எனது ஓய்வை அறிவித்தேன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்போது ஏன் இங்கு வந்துள்ளேன்? எனது தேர்தல் வியூகம் தவெகவுக்கு தேவையில்லை. ஆனால், எனது நண்பரும், சகோதரருமான விஜய்-க்கு உதவ வந்துள்ளேன்.
தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். அடுத்த வருடம் த.வெ.க. வென்ற பின்னர் உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள். தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு நன்றி சொல்ல தமிழகம் வரும்போது தமிழில் பேசுவேன்” எனக் கூறி தனது உரையை முடித்தார். பல மாநிலங்களில் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் நிகழ்ச்சி மேடையில் பேசியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:“யார் எந்த பள்ளியில் வேணாலும் படிக்கலாம்”… ஹேஸ்டாக் போட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள் – விஜய்…