2024 மக்களவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கணக்குகளை போட அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் இருந்த சில கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளன. இருப்பினும், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலை ஒட்டி கூட்டணி கணக்குகளை போட அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. கடந்த தேர்தலில் இருந்த சில கட்சிகள் அணி மாற திட்டமிட்டுள்ளன.
மார்கழி மாதத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவாரத்தை நடத்துவது அவ்வளவு உகந்ததாக இருக்காது என்பதால் பொங்கல் பண்டிகை முடிந்த பின் திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், கமல் போட்டியிட விரும்பு தொகுதிகள் பற்றிய பட்டியல் குறித்து அறிவாயலத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டதாகவும் அதில் கமல், கோவை, மதுரை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதுமட்டுமல்லாமல், 2021 தமிழக தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பாஜகவின் தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனிடம் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டதாலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கோவை தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகள் பெற்றதை மனதில் வைத்து இந்த தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம் என்பது கமலின் கணக்காக உள்ளது.
இந்தநிலையில், கோவை தொகுதியை யாருக்கு ஒதுக்கினாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இணைய உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு உதயநிதி புதிதாக அறிவுறுத்தியுள்ளதால். கோவை தொகுதியில் நிச்சயம் கமல் போட்டியிட வாய்ப்பு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.