ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் – ஹவுரா விரைவு ரயில்பாஹனாக நகர் அருகே வந்த போது விபத்துக்குள்ளாகி தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்தய ஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.