கடந்த 2013ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்‘ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நேற்று தனது 30-வது பிறந்தநாளை, தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்கிறார் ரவுடேலா. அந்த கேக்கின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ராப் பாடகர் ஹனி சிங்குடன் இந்தப் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘Love Dose 2’ படப்பிடிப்பில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. எனது திரைப் பயணத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்கு யோயோ ஹனிசிங்கிற்கு நன்றி. உங்களின் அயராத முயற்சிகளும், என் மீதான உண்மையான அக்கறையும் எனது வாழ்க்கையில் ஒரு சிறந்த அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : Devayani | நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் இப்படி ஒரு அதிசயமா..? அடடே இது நல்லா இருக்கே..!!
அவர் பகிர்ந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட 24 கேரட் கொண்ட கேக் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. ஹனி சிங் – ஊர்வசி ரவுடேலா காம்போவில் ’லவ் டோஸ்‘ என்ற சிங்கிள் கடந்த 2014இல் வெளியாகி 490 மில்லியன் வியூஸ்களைக் கடந்து ஹிட்டடித்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் இணைந்து ’லவ் டோஸ் 2.0’ என்ற சிங்கிளை உருவாக்கி வருகின்றனர்.
English Summary : Yo Yo Honey Singh Gifts Urvashi Rautela 24 Carat Gold Cake Worth 3 Crores On Birthday