fbpx

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்டநாள் இருக்க!… இப்படி யூஸ் பண்ணுங்க!… பாதுகாக்கும் டிப்ஸ்!

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப்பொருட்கள் இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.

முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சை பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும். சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்பு வராது. மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். முட்டைகோஸின் தண்டு அவ்வளவு சத்து நிறைந்தது. கோசை சமைத்துவிட்டு அதனை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்து சாப்பிடுங்கள். தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க சிறிது தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வையுங்கள்.

Kokila

Next Post

கோடைக்காலம்!... காரில் போகும்போது உணவுப்பொருள் எடுத்துச் செல்லாதீர்கள்!… ஏன் தெரியுமா?...

Fri May 5 , 2023
கோடை காலங்களில் காரில் உணவை எடுத்துச்செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் […]

You May Like