fbpx

AI பயன்படுத்துவது சட்டவிரோதம்!. பாலியல் துஷ்பிரயோக படங்களை உருவாக்கினால் 5 ஆண்டுகள் சிறை!. இங்கிலாந்து அரசு அதிரடி!

UK government: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தின் படங்களை உருவாக்குபவர்கள், சேமித்து வைப்பவர்கள் மற்றும் பகிர்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார்.

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்கும் உலகின் முதல் நாடு பிரிட்டன் என்று உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்தார். அதன்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதுதொடர்பாக மசோதாவை கொண்டுவரப்படும். அதன்படி AI பெடோஃபைல் கையேடு வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குழந்தைகளின் படங்களை தேடுதல், ஏற்கனவே உள்ள பாலியல் துஷ்பிரயோகப் படங்களில் அவர்களின் முகங்களை ஒட்டுதல் போன்ற செயல்களும் குற்றங்களாகக் கருதப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளை மிரட்டி அவர்களின் போலி படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் “குற்றவாளிகளின் ஆன்லைன் செயல்பாடுகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் கொடூரமான குற்றங்களைச் செய்ய அவர்களைத் தூண்டுகின்றன என்றும் யெவெட் கூப்பர் குறிப்பிட்டார்.

இந்த அரசு, குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாக்கவும், இந்த புதிய அச்சுறுத்தல்களுக்கு நமது சட்டங்கள் பதிலளிப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாது” என்று எச்சரிக்கைவிடுத்தார். குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தின் படங்களைப் பகிரும் வலைத்தளங்களை நடத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வகை செய்யும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 குழந்தைகள் ஏதோ ஒரு வகையான குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக இங்கிலாந்து அரசு கூறுகிறது.

Readmore: ‘நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்’!. கிராமி விருதை வென்ற பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

English Summary

Using AI is illegal!. 5 years in prison for creating sexual abuse images!. UK government takes action!

Kokila

Next Post

அதிர்ச்சி..!! சென்னையில் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் மரணம்..!! அறிகுறிகள் இதுதான்..!! மருத்துவர்கள் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!

Tue Feb 4 , 2025
There is no need to be afraid of this disease. If treated, it can be completely cured.

You May Like