நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, மாணிக்கம் என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை சீரியல்கள், படங்கள் என பிஸியாகிவிட்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதோடு சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். எப்போதும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் வனிதா சக பிரபலங்களை கலாய்த்தும் ட்ரெண்ட் ஆவார்.
இவருக்கும், நடிகர் ஆகாசுக்கும் முதலில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர். அதன்பிறகு வனிதா, தொழிலதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கடந்த வருடம் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். அதனைத்தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் பால் என்பவருடன் 3-வது திருமணம் நடைபெற்றது. ஆனால் அதில் எக்கச்சக்க குழப்பங்கள் நீடித்தது. பீட்டர் பாலின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பை கிளப்பினார். ஆனாலும் பீட்டர் பால் மீதான காதலால் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் வனிதா. இந்த திருமணம் ஒருசில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சமீபத்தில் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் 4 வது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வனிதா விஜயகுமார் தன் நீண்ட கால நண்பரான நடன இயக்குநர் ராபர்ட்டை வருகிற அக். 5 ஆம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். இது, வனிதாவுக்கு 4-வது திருமணம். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more ; பயங்கரம்.. கேஷ் ஆன் டெலிவரியில் ஐபோன் ஆர்டர்.. போனிற்காக டெலிவரி பாயை கொலை செய்த கும்பல்..!! – பின்னணி என்ன?