சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகை என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது வனிதா விஜயகுமார் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை சீரியல்கள், படங்கள் என பிஸியாகிவிட்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதோடு சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். எப்போதும் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், சக பிரபலங்களை கலாய்த்தும் ட்ரெண்ட் ஆவார்.
இவர் தனக்கு ஒரு அபூர்வ நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆம், கடந்த ஒரே வருடத்தில் மட்டும் பல நடிகைகள், தங்கள் உடல்ரீதியான பிரச்சனை குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் வனிதா விஜயகுமாரும் தனக்கு இருக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் கிளாஸ்ட்ரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையால், சிறிய இடங்களிலோ அல்லது பாத்ரூம், லிப்ட் போன்ற இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதனால் வனிதாவின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.