fbpx

சென்னையில் மெஹந்தி… தாய்லாந்தில் திருமணம்! வரவேற்பு எங்கே தெரியுமா? திருமணத்திற்கு பக்கா பிளான் போட்ட நடிகை!!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் சிம்மிளாக நடந்த நிலையில், திருமண பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் தனது அதிரடியான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் வரலட்சுமி. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமின்றி வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் வரலட்சுமி.

குறிப்பாக கோலிவுட்டில் விஜய்க்கு வில்லியாக சர்க்கார், தனுஷுக்கு வில்லியாக மாரி 2, விஷாலுக்கு வில்லியாக சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வரலட்சுமியின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ஒருகட்டத்தில் கோலிவுட்டில் வரலட்சுமிக்கு படவாய்ப்புகள் குறைந்தாலும் டோலிவுட்டில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு செம்ம பிசியாக உள்ளார் வரலட்சுமி.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமியின் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. மும்பையில் புது வீடு, வருங்கால கணவருடன் வெகேஷன் என கொண்டாட்டத்தில் இருந்த வரலட்சுமிக்கு வருகிற ஜூலை மாதம் திருமணம் செய்தி இணையத்தில் வலம் வருகிறது.

சென்னையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் தடபுடலாக மெஹந்தி ஃபங்ஷனும் ரிசப்ஷனும் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் திரையுலகினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை பாலிவுட் ஸ்டைலில் தாய்லாந்தில் குடும்ப உறுப்பினர்களோடு நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர். வருகிற ஜூலை மாதம் 2-ந் தேதி நடைபெறும் நடிகை வரலட்சுமி திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளுக்காக சமீபத்தில், வரலட்சுமியும் நிகோலயும் தாய்லாந்து சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

43 வயதாகும் நிகோலய் சத்தேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். இந்த செய்தி தெரிய வந்ததும் பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதற்கெல்லாம் மறைமுக பதிலடியாக வரலட்சுமி, ‘என் வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் தரும் முடிவுகளைத்தான் எடுப்பேன். யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று பதிவிட்டார்.

சூர்யகுமார் யாதவ் எந்த தமிழ் நடிகரின் தீவிர ரசிகர் தெரியுமா..? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்..!!

Next Post

என்னது வெங்காயம் அசைவமா..? இது புதுசா இருக்கே..!!

Tue May 28 , 2024
வங்க மொழி பேசும் பகுதியில் நீண்ட காலமாக வெங்காயம் அசைவ உணவு பட்டியலில் இருந்து வருகிறது. சைவ உணவாக இருந்தாலும் அல்லது அசைவ உணவாக இருந்தாலும் வெங்காயம் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிமையான சாம்பார் சாதம் முதல் பிரியாணி வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது வெங்காயம். அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல நாடுகள் வெங்காயத்தை தங்களது முக்கிய உணவாக கொண்டுள்ளன. இந்த வெங்காயத்தை வங்க மொழி […]

You May Like