சென்னையில் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக அகற்றினர்.
சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திக். இக்குழந்தை வீட்டில் உள்ள பாத்திரத்தை வைத்து வழக்கம்போல் விளையாடியிருக்கிறது. அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பாத்திரத்தில் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை சிக்கியது. எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. இதையடுத்து இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னே குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரம் அகற்றப்பட்டதால் அக்குழந்தையின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.