மகிழ் திருமேனி எழுதி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் சித்தார்த்தா, ஆரவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் – த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.. வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித்துடன் 3-வது முறையாக அனிருத் இணைந்துள்ளார்..
விடாமுயற்சியின் அப்டேட்க்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் திடீர் சர்பிரைஸாக படக்குழுவினர் நேற்று இரவு விடாமுயற்சியின் டீசரை வெளியிட்டனர். வசனங்களே இல்லாமல் உருவாகி இருக்கும் இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விடாமுயற்சி படம் 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை கதை என்ன என்பது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் விடாமுயற்சி என்று கூறப்படுகிறது.
1997 ஆம் ஆண்டு ஜொனாதன் மோஸ்டோவ் இணைந்து எழுதி இயக்கிய ஒரு அமெரிக்க த்ரில்லர் படம் தான் பிரேக்டவுன். இப்படத்தில் கர்ட் ரஸ்ஸல், ஜே.டி. வால்ஷ் மற்றும் கேத்லீன் குயின்லன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்..
இந்த படத்தின் ஹீரோ, தனது மனைவி உடன் காரில் உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அப்போது ஏற்படும் எதிர்பாராத விபத்து காரணமாக அவர்கள் செல்லும் காரில் பிரச்சனை ஏற்படுகிறது. அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லா இடம் என்பதால் என்ன செய்வதென்று ஹீரோவுக்கு தெரியவில்லை. அப்போது அங்கு வரும் ஒரு ட்ரக் ட்ரைவர், ஹீரோயினை அருகில் உள்ள கஃபேவுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறார்.
அதன்படி ஹீரோவும், தனது மனைவியை அந்த ட்ரக் டிரைவருடன் அனுப்பி வைக்கிறார். ஒருவழியாக ஹீரோ தனது காரை சரிசெய்த உடன் அந்த கஃபேவுக்கு சென்று பார்க்கும் போது மனைவியை காணவில்லை.
அப்போது அங்கு வரும் ட்ரக் டிரைவரும் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் கூறிவிட ஹீரோ தனது மனைவியை தேடி கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை. விடாமுயற்சி படத்தின் டீசரை பார்க்கும் கிட்டத்தட்ட இதே கதைக்களம் இருப்பதை பார்க்க முடிகிறது. சுவாரஸ்யமான கதைக்களமாக இருப்பதால் இந்த படத்தின் மீதான அறிவிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Read More : “நீ கூட்டிட்டு வந்த ஆட்கள் எல்லாரும் இப்பதான் கைதட்டுறாங்க”; இளையராஜாவின் பேச்சால், கூனிக்குறுகிய சூரி..