விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இம்முறை விலகுவதாக அறிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் கமல்ஹாசன் தான். கமல்ஹாசன் நகைச்சுவையாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்மையாகவும், விளையாடுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். எனவே, அவரைப்போல நன்றாக பேச தெரிந்த ஒருவரால் மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியும்.
இந்த சூழலில் தான் விஜய் டிவி நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து பிக் பாஸ் 8-வது சீசனை நடத்தவுள்ளது. ஏற்கனவே, விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவல் முன்னதாகவே லீக் ஆகிவிட்டது. தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி ஒரு பெரிய துணி கடை ஒன்றிற்குள் செல்கிறார். அங்கு ஆண்களுக்கான டிரஸ் எல்லாம் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் கோட்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து எடுத்து இருக்கிறார். இது எதை குறிப்பிட்டு இப்படி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
Read more ; தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு போறீங்களா? டோன்ட் டோரி..!! சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்.. ஆஹா!!