fbpx

’ரமணா’ படத்தின் இறுதிக்காட்சியை உண்மையாக்கிய விஜயகாந்த்..!! சென்னையை நோக்கி படையெடுக்கும் கூட்டம்..!!

விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையே ரமணா படத்தின் இறுதிக்காட்சி போல ஆகியுள்ளது.

விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை காலமானார்.

விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு ஏராளமானோர் நேரில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை நேரில் பார்த்து விடுவதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையில் இப்போதே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் விஜயகாந்த்தை பார்த்து பேசும் வசனமான “ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா” என்பதைக் குறிப்பிட்டு விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், ரமணா படத்தின் இறுதிக்காட்சியில் விஜயகாந்த்தின் இறந்த உடலை காண சிறைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதோடு, இன்று, விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டுள்ள ரசிகர்கள், தொண்டர்களின் படத்தை ஒப்பிட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Chella

Next Post

’வேண்டவே வேண்டாம்’..!! 2023இல் மக்களால் அதிகம் டெலிட் செய்யப்பட்ட செயலிகள்..!! முதலிடத்தில் இன்ஸ்டாகிராம்..!!

Fri Dec 29 , 2023
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அதிக அளவில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தான் தற்போது சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சுமார் 4.8 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் பிரபலமான தளங்கள் மக்களின் ஆதரவை இழந்து வருகின்றன என்றும் கூறப்பட்டது. அந்த வரிசையில் தான் தற்போது, இந்த 2023ஆம் ஆண்டில் […]

You May Like