fbpx

’பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் அதிகரிப்பு’..! கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், “பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக இந்தாண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், இருப்பதையே இந்த குறியீட்டு அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

இஷ்டத்திற்கு பேசினால் காங்கிரஸ் கட்சியை யார் மதிப்பார்கள்... கே.எஸ்.அழகிரி  வேதனை | k.s.azhagiri requests to tncc executives, everyone should speak the  same way - Tamil Oneindia

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருக்கிறது. பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விட, பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் தான் இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் வெற்று பேச்சுகளால் அல்ல”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கனமழை தொடர்வதால் மாவட்ட நிர்வாகம் உத்தரவு...

Thu Jul 14 , 2022
புதுச்சேரி மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி […]

You May Like