fbpx

’மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகளால் வன்முறை’..! அமைச்சர் எ.வ.வேலு

தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என்று கூறுவது தவறான தகவல் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், வன்முறையில் பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் 67 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களின் சான்றிதழ்கள் உட்பட ஏராளமான பொருட்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் ஊடுருவி தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே வன்முறையை நிகழ்த்தியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Chella

Next Post

ரூ.2 லட்சத்துக்கும் மேல் எந்த காரணத்திற்காகவும் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்ய தடை..! மத்திய அரசு

Mon Jul 18 , 2022
ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் ‘பான்கார்டு’ கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால், தற்போது புதிய விதிமுறை கொண்டு […]
ரூ.2 லட்சத்துக்கும் மேல் எந்த காரணத்திற்காகவும் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்ய தடை..! மத்திய அரசு

You May Like