fbpx

வயலினிஸ்ட் ராமசுப்பு காலமானார்…! சோகத்தில் மூழ்கிய தமிழ் சினிமா…!

இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ் சினிமாவில் தனக்கான தனி முத்திரை பதித்த வயலினிஸ்ட் ராமசுப்பு (91) காலமானார். இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் வயலினிஸ்டாக இருந்த அவர், பல்வேறு விருதுகளை வாங்கியவர். 9 வயதில் வயலின் கற்றுக்கொள்ளத் தொடங்கிய அவர், 30 வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அன்னக்கிளி’யிலிருந்து மகாநதி, மௌனராகம், புன்னகை மன்னன், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

சென்னை அடையார் இசைக் கல்லூரியில் வயிலினில் சங்கீத வித்வான் கோர்ஸ் முடித்து விட்டு அறுபதுகளில் ஹெச்.எம்.வி.,யில் இணைந்தார். தன்னுடைய முப்பதாவது வயதிலிருந்து சினிமாவில் பணிபுரியத் தொடங்கிய ராமசுப்பு, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் பணிபுரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘அன்னக்கிளி’யிலிருந்து மகாநதி, மௌனராகம், புன்னைகை மன்னன், அலைகள் ஓய்வதில்லை முதலான பல ஹிட் படங்களில் இவர் இளையராஜாவுடன் இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவிலும் கன்டசாலா உள்ளிட்ட முக்கிய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்திருக்கிற ராமசுப்பு குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ் ரெட்டி, தமிழ்நாடு முதலைமச்சராக இருந்த ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து துறையில் சாதித்ததற்கான விருதுகளையும் வாங்கியிருக்கிறார். அவரது மறைவு துறை திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

Violinist Ramasuppu passed away

Vignesh

Next Post

ஷாக்!. டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த ஆண்டு வரை அதிபராக இருக்க மாட்டார்!. ஏன் தெரியுமா?

Fri Nov 8 , 2024
Donald Trump Has Won, But Won't Be President Until Next Year - Here's What Comes Next

You May Like