fbpx

சுங்கச் சாவடிகளில் VIP-களும் கட்டணம் செலுத்த வேண்டும்…! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!

சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் இனி வரும் காலங்களில் அனைவரும் கட்டணம் செலுத்தியே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கும் நடைமுறையின் படி சுங்கச்சாவடிகளில் பொதுவாக உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு பயனர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலாளரின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முன்மொழிவு வெளிப்பட்டது. மத்தியில் மீண்டும் புதிய அரசு அமைந்தவுடன் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தினால், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை திருத்தம் கொண்டு வர வேண்டும்.

யார் யார் கட்டண சலுகைக்கு உரியவர்கள் என்ற தகவல்களுடன் பெரிய அறிவிப்பு பலகைகளை ஒவ்வொரு சுங்கச் சாவடிகளின் இரு பக்கமும் வைப்பதால் மக்கள் பணம் வீணாகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அரசு பணிகளில் உள்ள சில தரப்பினருக்கு அதிருப்தியும் எழுகிறது. இதற்குக் காரணம், சுங்கச்சாவடிகளில் கட்டணத் தள்ளுபடிக்குத் தகுதிபெறும் வாகனங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே FASTagகளை வழங்கியுள்ளது.

Vignesh

Next Post

Rain Alert: 18, 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை...!

Tue Apr 16 , 2024
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் 18, 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வரும் 19-ம் தேதி வரை தென் தமிழகம் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க […]

You May Like