பாபர் அசாமிடமிருந்து, விராட் கோலி கற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் கூறியுள்ளார்.
லண்டன் ஓவலில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தநிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியும் தோல்வியடைந்தது குறித்து, கருத்து தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. முதல் இன்னிங்சில் அஜிங்கியா ரஹானே மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார், மற்ற முன்வரிசை வீரர்கள் அனைவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அவர்கள் சரியாக ஷாட் தேர்வு செய்யாததால் தான் விரைவாக தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
மேலும் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள், விராட் கோலி உட்பட, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் இருந்து இது போன்ற வேகமான மற்றும் ஸ்விங் ஆகும் மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கல் தங்களது பேட்டிங் டெக்னிக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். வேகமான மைதனைகளுக்கு தகுந்தாற் போல் விளையாட வேண்டும். ஆட்டத்தின் ஐந்தாவது நாளில் ஸ்காட் போலந்து வீசிய ஒவரில் கோலி மற்றும் ஜடேஜா விக்கெட் விழுந்தது தான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்து தோல்வியில் முடிந்தது. கடந்த 2021 இல் நடைபெற்ற முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியிலும் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.