fbpx

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நேரடி முகவர்களுக்கான நேர்முக தேர்வு…!

சென்னை அண்ணாசாலை தலைமை தலைமை அஞ்சல் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியைப் பெற்றிருப்பின் முதன்மை அஞ்சல் தலைவர் அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 20.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-லிருந்து 50 வரை இருக்க வேண்டும். சுய தொழில் செய்வோர் / வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், வயதுச்சான்று, முகவரிச்சான்று, மற்றும் கல்வி சான்றுடன் அசல் மற்றும் இரண்டு நகல் அனுப்பவும். நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5,000 தேசிய சேமிப்புப் பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தைப் பணப்பாதுகாப்புப் பத்திரமாக வழங்கவேண்டும்.

Vignesh

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஒரு மணி நேரத்திற்கு ரூ.440 ஊதியம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும்

Fri Dec 29 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part Time Medical Consultants பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் […]

You May Like