fbpx

எச்சரிக்கை..! மீண்டும் தொடர் மழை..! மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாலும், தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளான தங்கமாபுரிபட்டினம், நேரு நகர், பெரியார் நகர், உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் நீலா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

எச்சரிக்கை..! மீண்டும் தொடர் மழை..! மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

இதையடுத்து நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் 24 மணி நேரமும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பெண்களுக்கு ஏற்ற வகையில் வேலை நேரத்தை மாற்ற வேண்டும்.. பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்..

Fri Aug 26 , 2022
பெண்களுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வான வேலை மற்றும் நேரத்தை மாற்றுவது எதிர்காலத்தின் தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “அமிர்த காலில் வளர்ந்த தேசத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் கனவுகள் மற்றும் குறிக்கோள்களை நனவாக்குவதில் இந்தியாவின் தொழிலாளர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது. அமைப்பு […]
’ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’...!! பிரதமர் மோடியின் புதிய திட்டம்..!!

You May Like