fbpx

இந்த 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!!

நீலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், இன்று (ஆக. 4) முதல் வரும் 8ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 9ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நாளைய தினம் நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம்..!! ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் கிடைக்கும்..!! விவரம் இதோ..

English Summary

According to the Meteorological Department, heavy rain is likely to occur in 5 districts including Nilgiris and Tiruvannamalai today.

Chella

Next Post

மக்களே உஷார்..!! நீங்களும் இந்த மாதிரி சிக்கிடாதீங்க..!! மொத்த பணமும் காணாமல் போய்விடும்..!!

Sun Aug 4 , 2024
The police have also warned that no one should use fake loan apps.

You May Like