fbpx

Warning | தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம்..? வணிகர் சங்கங்கள் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும் இன்றளவும் தொடர்கிறது. தற்போது தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை மட்டும் உயர்த்தப்படாமல் இருப்பது, நீதிக்கு முரணானது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித செய்திகளும் இல்லை. நேர்மையான வணிகம் செய்பவர்களின் அன்றாட செலவினங்களுக்காக எடுத்துச் செல்லும் ரொக்கமே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது.

இதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கத்தால் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ஓரிரு நாளில் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மீண்டும் சந்தித்து முறையிட இருக்கிறோம். தீர்வு கிடைக்காவிட்டால், தேர்தல் நடத்தை விதிகள் எனக் கூறி வணிகர்களை வதைப்பதைக் கண்டித்து, ஏப்.19ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்த நேரிடும்” என்று அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read More : Lok Sabha | திமுக, அதிமுகவுக்கு வேறு சின்னமா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

Chella

Next Post

Good Friday | கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கொண்டாட காரணம் என்ன..? இன்று கடைபிடிக்க வேண்டிய விஷயம் என்ன..?

Fri Mar 29 , 2024
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் புனித வெள்ளியும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் தான் புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்ந்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட நாள் கிடையாது. இது அவர்களின் துக்கநாள். புனித வெள்ளி ஏன் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது? அதன் வரலாறு என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மனித குலத்தை பாவத்தில் […]

You May Like