சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த இன்றே கடைசி நாள்.
சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களை செலுத்த இன்றே கடைசி நாள். வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை நாட்களிலும் இயங்கி வருகிறது. வரி கட்ட தவறியவர்கள் உடனடியாக அதனை செலுத்தி விட வேண்டும்.
வரி, கட்டணங்களை காசோலை, வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நுகர்வோர் தங்களது நிலுவை தொகையை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login> என்ற இணையதளம் வழியாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். இ-சேவை மையங்கள், யூபிஐ கியூஆர் குறியீடு போன்ற முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.