fbpx

உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?? அப்போ கண்டிப்பா இதை பண்ணுங்க…

நாம் என்னதான் வீட்டை துடைத்து சுத்தமாக வைத்தாலும், பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை இருக்கத்தான் செய்யும். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில், இந்தப் பிரச்சனை அதிகமாக இருக்கும். இப்படி வீட்டில் சுற்றி வரும் பல்லி மற்றும் கரப்பான் பூச்சி உணவில் விழுந்து விட்டால் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். கரப்பான் பூச்சி வீட்டில் இருந்தால் கட்டாயம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும்.

இதற்காக நாம் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்தினாலும், அது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். இதனால் நீங்கள் வீட்டுத் தரையை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம், கரப்பான் பூச்சி, எறும்பு மற்றும் பல்லி போன்றவற்றை எளிதாக விரட்டலாம். அது என்ன பொருள்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

தரையை மாப் வைத்து துடைக்கும்போது, ஒரு கப் வினிகரில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து விடுங்கள். இப்போது இந்த கரைசலை தண்ணீரில் சேர்த்து, இந்த தண்ணீரை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இப்படி சுத்தம் செய்தால், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற எந்த தொந்தரவும் இருக்காது.

இதற்க்கு பதிலாக, நீங்கள் உப்பு மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதற்க்கு 1 பக்கெட் தண்ணீரில், நான்கைந்து ஸ்பூன் உப்பு சேர்த்து, அதில் இரண்டு எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து விடுங்கள். இப்போது இந்த தண்ணீரை வைத்து தரையை சுத்தம் செய்தால், உங்கள் அறை பளபளப்பாக இருப்பது மட்டுமின்றி கரப்பான் பூச்சிகளின் தொல்லையும் இருக்காது.

Read more: “சாவுர வயசுல உனக்கு கள்ளக்காதல் கேக்குதா??” மருமகளுடன் சேர்ந்து, மாமியார் செய்த காரியம்…

English Summary

ways-to-avoid-lizard-and-coackroaches

Next Post

தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...! முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு...!

Sat Nov 23 , 2024
Schools in Tenkasi district are closed today.

You May Like