அவசரமான கால சூழலில், குக்கர் இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. குக்கரில் சமைப்பதால், நேரமும் வேலையும் மிச்சம் ஆகிறது. இதனால் இல்லத்தரசிகள் குக்கரில் சமைக்க தான் விரும்புகிறார்கள். ஒரு பக்கம் இது வேலையை மிச்சம் செய்தாலும், மற்றொரு பக்கம் குக்கரில் இருந்து வெளியேறும் நீர் பெரும் பிரச்சனையாக இருக்கும். அப்படி குக்கரில் இருந்து வெளியேறும் நீரால், சுவர், அடுப்பு, குக்கரின் மூடி என்று எல்லாத்தையும் சுத்தம் செய்ய வேண்டி இருக்கும். அதுவும் சுலபமாக நாம் நீக்கி விட முடியாது. நன்கு அழுத்தி கை வலிக்க தேய்த்தால் தான் அந்த கரை போகும். பொதுவாக வருடங்கள் கடந்தாலே குக்கர் இது போன்ற பிரச்சனைகளை கொடுக்கும். எந்த பிராண்ட் குக்கராக இருந்தாலும், அதனை சரியாக பராமரிக்கவில்லை என்றால் கட்டாயம் பிரச்சனை தான்.
பொதுவாக குக்கரில் இருந்து தண்ணீர் வெளியே கசிய காரணம் சுத்தமின்மை தான். குக்கரின் மூடி, விசில் என அனைத்தையும் எந்த அடைப்பும் இல்லாமல் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி தண்ணீர் வெளியே வர மற்றொரு காரணம், ரப்பர் தளர்வாக இருப்பது. ரப்பர் சீக்கிரம் தளர்வாவதை தவிர்க்க சமைத்த பிறகு அதை குளிர்ந்த நீரில் போட வேண்டும். இதற்க்கு பதில் நீங்கள் ரப்பரை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரிலும் வைக்கலாம். இப்படி தண்ணீர் கசிவதை தவிர்க்க சிறந்த வழி என்றால், அதற்க்கு எண்ணெய்யை பயன்படுத்துவது தான். ஆம், நீங்கள் குக்கரில் என்ன சமைத்தாலும், அதில் ஒரு சொட்டு எண்ணெய் விடுங்கள். அதோடு குக்கரின் மூடியைச் சுற்றியும் எண்ணெய் தடவுங்கள். இப்படி செய்தால் குக்கரில் உள்ள தண்ணீர் வெளியே வராது.
Read more: கழுத்து மட்டும் ரொம்ப கருப்பா இருக்கா?? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..