தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ”நடிகர் ராஜ் தருண் தன்னுடன் 10 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் உறவில் இருந்துவிட்டு தற்போது சக நடிகை ஒருவருடன் சேர்ந்து தன்னை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, நடிகர் ராஜ் தருண் தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், இதை சட்டப்படி முறைப்படுத்துவேன் என்று கூறிவிட்டு தற்போது தன்னை ஏமாற்ற முயற்சிப்பதாகவும்” லாவண்யா என்ற பெண் கூறியிருக்கிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ராஜ் தருண், ”நாங்கள் 10 வருடங்கள் ஒன்றாக இருந்தது உண்மைதான். அதன் பிறகு நாங்கள் இருவரும் பேசி சமரசமாக பிரிந்து கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறி பரபரப்பு குற்ற சாட்டுகளை முன்வைக்கிறார்.
எனக்கு இதைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை. ஒருமுறை லாவண்யா போதை பொருள் வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நான் அதைப்பற்றி வெளியில் கூட சொல்லவில்லை” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.