10ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியையை நிர்வாணமாக வீடியோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் பெண், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் சரியாக படிக்காத மாணவர்களை விடுமுறையில் தனது வீட்டிற்கு வரவழைத்து இலவசமாக டியூஷன் நடத்தி வந்திருக்கிறார். அப்போது, மாணவன் ஒருவர், ஆசிரியை குளித்துக் கொண்டிருந்ததை மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளான்.
பின்னர், அந்த வீடியோவை ஆசிரியையிடம் காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்றும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால், மாணவனிடம் பேசுவதை ஆசிரியை தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவன் அந்த வீடியோவை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் 3 பேரும் ஆசிரியையின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பரப்பியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஆசிரியை தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால், தன்னார்வ அமைப்பு ஆசிரியையின் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றி அவருக்கு உதவி செய்தது. பின்னர் இது குறித்த ஆசிரியையின் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை ரெடி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!