fbpx

”தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்”..! சீனா பகிரங்க எச்சரிக்கை

’தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்’ என்று சீனா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. இதன் காரணமாக தைவான், சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதற்கு சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

”தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுப்போம்”..! சீனா பகிரங்க எச்சரிக்கை

இந்நிலையில், தைவான் விவகாரம் உலக அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அதுகுறித்து சீனா வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”தைவானை அமையாதியான முறையில் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், தேவைப்பட்டால் படை பலத்தை பிரயோகித்து அதை தன்வசப்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது. தைவான் விவகாரத்தில் வெளிநாடுகள் தேவையின்றி தலையிடுவதாகவும் வெள்ளை அறிக்கையில் அமெரிக்காவை சீனா மறைமுகமாக கண்டித்துள்ளது”.

Chella

Next Post

“ இலவசங்களும் சமூக நல திட்டங்களும் வெவ்வேறானவை..” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து..

Thu Aug 11 , 2022
இலவசங்களும் சமூக நல திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.. அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை வழங்குவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]

You May Like