fbpx

Weather Update: தென் மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் கனமழை…! எங்கெல்லாம் தெரியுமா…?

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செப்டம்பர் 3 தான் கடைசி தேதி!… B.E சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!… மிஸ் பண்ணிடாதீங்க!

Wed Aug 30 , 2023
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, கடந்த ஜூன் 22இல் 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது . மொத்தம் உள்ள 1.57 லட்சம் இடங்களில் இதுவரை 1,06,641 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்கள், முதற்கட்ட பொதுக் […]

You May Like