மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 73,887 இடங்கள் மற்றும் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் தேர்தல் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலத்தில் 697 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மாநிலத்தில் பதினாறு பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.