fbpx

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது என்ன? விரிவான அறிக்கை தர காவல்துறைக்கு உத்தரவு..!

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதாடிய எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார். கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் ஆவார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது என்ன? விரிவான அறிக்கை தர காவல்துறைக்கு உத்தரவு..!

ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் தடுக்கவில்லை. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருந்தோம். உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

Madras High Court raps Election Commission of India, refuses to gag media  on oral observations | Cities News,The Indian Express

அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது, போலீஸ் தலையிட்டதால்தான் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக தலைமைக் கழகத்தில் 11ஆம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

’இனி பள்ளி மாணவர்கள் கட்டாயம் இதை செய்யக்கூடாது’..! வெளியான பரபரப்பு உத்தரவு

Thu Jul 14 , 2022
பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

You May Like