முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். இவர் முன்னாள் போப் ஜான் பால் மறைவுக்குப்பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார். இந்த நிலையில் 600 ஆண்டு கால வரலாற்றில் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட், கடந்த டிசம்பர் 31ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் கடந்த ஜனவரி 5ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், போப் ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன என்று இத்தாலியில் உள்ள பத்திரிகைகள் அவரது ராஜினாமாவிற்கு பிறகு பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அதற்கு வாடிகன் நிர்வாகம் அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் வதந்திகள் அதை நம்பவேண்டாம் என அறிக்கையிட்டது.
கத்தோலிக்க மக்களாலேயே எதிர்க்கப்பட்ட போப் பெனடிக்ட் : உலகில் உள்ள 120 கோடி கத்தோலிக்கர்களுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் பதவி என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. பல போப்கள் நோய்வாய் பட்டு மரண படுக்கையில் இருந்த போதும் ராஜினாமா செய்ய முடியாத அந்த பதவியை உடல்நிலையை காரணம் காட்டி வேண்டாம் என சொன்னது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது கத்தோலிக்க மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான்.
ஒர் பாலின திருமணத்தை எதிர்த்த போப் பெனடிக்ட்: ஒர் பாலின திருமணங்கள் பல்வேறு மேலை நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு தன்பால் ஈர்ப்பாளர்களாக இருப்போருக்கு கத்தோலிக்க முறைப்படி தேவாலயங்களில் திருமணம் முடித்து வைக்கும் சம்பவங்கள் அரங்கேறின. அதை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். தன்பால் ஈர்ப்பாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் லிவிங் டூ கெதராக இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு வலியுறுத்துமாறு ஆயர்களுக்கும் கர்தினால்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார். இந்த அறிவிப்பு கத்தோலிக்க கிறித்தவ மக்கள் ஒரு சிலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பதவி விலகக் கோரி இவருக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
கருத்தடைக்கு கண்டனம் தெரிவித்த போப்: கத்தோலிக்க திருச்சபையில் கருத்தடை என்பது கொலைக்கு சமம். ஆனால் மேலை நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்த கருத்தடைக்கு அனுமதி வழங்கும் கோரிக்கைக்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் பாதிரியார்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, அந்த தவறுகளுக்காக பெனடிக்ட் மன்னிப்பு கேட்டார். ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த 16-ம் பெனடிக்ட் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார். ஆனால் தவறு செய்தவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்காததால், கத்தோலிக்கர்களில் இரு சாரார் இவரது தலைமை குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வளவு எதிர்ப்புகள் மத்தியில் ஒரு மனிதன் சகித்துக்கொண்டு அந்த பதவியை வலுப்படுத்தக்கூடிய வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு கட்டளையிட்டதாக தெரிவித்தார். அதாவது போப்பையே மிரட்டக்கூடிய அளவிற்கு அவருக்கு கீழ் ஒரு கூட்டமே செயல்பட்டது என்பதுதான் அதன் பொருள்.
திருமணம் செய்து வைக்க வலியுறுத்தும் பாதரியார்கள் : கத்தோலிக்க கிறிஸ்தவ பாதரியார்கள் திருச்சபை விதிகளின்படி திருமணம் செய்து கொள்ள முடியாது, ஆனால் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து சென்ற பிரிவினைவாதிகள் அதாவது பிராடஸ்டான்ஸ், பெந்தேகோஸ்தே போன்ற திருச்சபைகளில் பாதரியார்களாக இருப்போர் திருமணம் செய்து தங்கள் சந்ததிகளை வளர்த்து கொள்கின்றனர். இந்த நிலையில் கத்தோலிக்க பாதிரியார்களும் நாங்களும் மனிதர்கள் தானே, மற்ற திருச்சபைகளை போலவே தங்களுக்கும் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு நீண்ட நாட்களாக வாடிகனை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாலியல் குற்ற சம்பவங்கள் குறையும் என ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கை இதுவரை வாடிகனால் பரிசீலிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அதுமட்டும் சட்டமாக்கப்பட்டால் இந்தியா உட்பட பல நாடுகளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவர் என்ற அச்சம் வாடிகனுக்கு உண்டு.
போப் பெனடிக்ட் மட்டுமல்ல தற்போது பதவியில் உள்ள போப் பிரான்ஸின் நிலமையும் அதேதான். தங்களுடைய மன வேதனையை சொல்ல இது போன்ற துறவிகளுக்கு கடவுளை தவிர வேறு துணை இல்லை என்பதே பலரின் நம்பிக்கை…