பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் மாதாந்திர அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 65 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மே 1ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் புகார்களில் தெரிவித்தபடி கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மே 16 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில், புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் 6,508,000 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது. தீங்கு விளைவிக்கும் அல்லது தேவையற்ற செய்திகளை அனுப்ப முயன்ற 2,420,700 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆபாசச் செய்திகள் போன்ற தகவல்களை பரிமாற்றம் செய்தால் உங்களுடைய வாட்ஸப் கணக்குகளும் முடக்கப்படலாம் என நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.