ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?
பூமியின் மேலோட்டத்தில் உள்ள விரிசல்கள் வழியாக பாயும் சூடான, கனிமங்கள் நிறைந்த திரவங்களில் இருந்து தங்கம் உருவாவதாக கூறப்பட்டது. மேலும், இந்த திரவங்கள் குளிர்ச்சியடையும் போது, தங்கமானது சுற்றியுள்ள குவார்ட்ஸில் படிந்து குவிகிறது. இப்படி தான் தங்கம் உருவாகிறது என முந்தைய ஆய்வு கூறியது.
டாக்டர் கிறிஸ் வொய்சியின் தற்போதைய ஆய்வின்படி, குவார்ட்ஸில் பைசோ எலக்ட்ரிசிட்டியை உருவாக்குவதன் மூலம் பூகம்பங்கள் தங்கக் கட்டிகளை உருவாக்கத் தூண்டும் என்று கண்டறியப்பட்டது. இந்த செயல்பாட்டில் இயந்திர அழுத்தம் சில பொருட்களில் Electrical charge-யை தூண்டுகிறது என்று தெரிய வந்துள்ளது. வடிகட்டிய குவார்ட்ஸ் மின் வேதியியல் முறையில் தங்கத்தை அதன் மேற்பரப்பில் வைப்பது மட்டுமல்லாமல் இது தங்க நானோ துகள்களையும் உருவாக்குகிறது.
இந்த செயல்முறை புதியவற்றை உருவாக்குவதை விட ஏற்கனவே உள்ளவற்றில் தங்கத்தை குவிப்பதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் அதிக தங்கம் டெபாசிட் செய்யப்படுகிறது. மின் இன்சுலேட்டராக இருக்கும் குவார்ட்ஸ் மற்றும் கடத்தியான தங்கம் இந்த செயல்முறைக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன. நிலநடுக்கத்தின் போது குவார்ட்ஸ் அழுத்தத்தை அனுபவிக்கும் போது, அது Electrical charge-ஐ உருவாக்குகிறது என கிறிஸ் வொய்சியின் தற்போதைய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Read more ; மோடி ஆட்சியின் 100வது நாள்.. இதுவரை 38 ரயில் விபத்துகள்..!! இதுதான் உங்கள் சாதனையா? காங்கிரஸ் விமர்சனம்