Isaac Newton: உலகம் எப்போது அழியும் என்பதை 300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் பிரபல விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் கணித்துள்ளார் .
புவியீர்ப்பு விசையின் விதிகளை உருவாக்கியவரும், முதல் எதிரொளிக்கும் தொலைநோக்கியை உருவாக்கியவரும், பூமியின் சரியான வடிவத்தை கணித்தவருமான, அறிவியலாளரான சர் ஐசக் நியூட்டன், உலகத்தின் முடிவு எப்போது என்பதையும் தெளிவாக எழுதிவைத்திருக்கிறார் என்னும் ஆச்சரிய தகவல் ஒன்று உலகின் கவனம் ஈர்த்துள்ளது. சர் ஐசக் நியூட்டன் 2060இல் உலகம் முடிவுக்கு வந்துவிடும் என கணித்துள்ளார். பைபிளையும் மத சம்பந்தமான நூல்களையும் கவனமாக ஆராய்ந்த நியூட்டன், உலகம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை துல்லியமாக கணக்கிட்டுள்ளார்.
நியூட்டனின் கணக்குப்படி, 2060இல் உலகம் முடிவுக்கு வந்துவிடும். அவர் இதை 1704ஆம் ஆண்டு எழுதினார். அவரைப் பொருத்தவரை, அது நீண்ட காலத்துக்குப் பின் நிகழவிருக்கும் ஒரு விடயம். ஆனால், நமக்கு? அப்படியானால், இன்னும் 35 ஆண்டுகளில் உலகம் முடிவுக்கு வந்துவிடுமா என மக்கள் கலங்கத் துவங்கிவிட்டார்கள்.பைபிளின் அடிப்படையில், 21ஆம் நூற்றாண்டின் மத்தியில் இயேசு கிறிஸ்து உலகத்துக்கு இரண்டாவது முறையாகத் திரும்ப வருவார் என்பதும், அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கு அவரது ஆட்சிக்காலம்தான் என்பதும் நியூட்டனின் நம்பிக்கை ஆக உள்ளது.
Readmore: Job Camp: படித்து வேலை இல்லா நபர்களுக்கு இன்று காலை 9 மணி முதல்….! மிஸ் பண்ணிடாதீங்க…