fbpx

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain lashes Chennai, causes traffic snarls, flooding; IMD issues red  alert | Latest News India - Hindustan Times

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஜூலை 12) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 12ஆம் தேதி லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கொரோனா பாதித்த அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு

Sun Jul 10 , 2022
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு என்பது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் குறைக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் அணியவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் […]
’அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும்’..!! முதலமைச்சர் அதிரடி

You May Like