fbpx

Priyanka Vs Manimegalai | நீங்க பேசுறது டிஸ்டர்ப் ஆகுது.. உன்ன இந்த ஷோவ விட்டு அனுப்புறேன் டி..!! – CWC செட்டில் இருந்து லீக் ஆன ஆடியோ..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் மணிமேகலை. அவர் சனிக்கிழமை ஒளிபரப்பான அரையிறுதி சுற்றின் முதல் எபிசோடில் பாதியிலேயே சென்றுவிட்டார். பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பில் இருவரும் சண்டை யிட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில் மணிமேகலை என ப்ரியங்கா ஆரம்பிக்க, நீங்க பேசுவது டிஸ்டர்ப் ஆகுது, எதுக்குங்க கத்தி கத்தி பேசுறீங்க. என்ன பெரிய இது மாதிரி ஓவராக பேசுறீங்க. ஏன் இப்படி ரூடாக பேசுறீங்க என மணிமேகலை அந்த ஆடியோவில் கேட்டிருக்கிறார்.

இவ விஷயத்தில் ஒரு நாள் கூட நான் போட்டி போடல. ஆமாம், உன்னை அனுப்பணும் வெளியே. கிளம்பு, போ வெளியே போ. யார் வெளியே போறாங்கனு பார்ப்போம் என்கிறார் ப்ரியங்கா. இந்த ஆடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பிரியங்க்கா பேசியதை எடிட் செய்து இப்போது பரப்பி வருகின்றனர் எனவும் இணைய வாசிகர் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read more ; B.E முடித்த நபர்களுக்கு மாதம் ரூ.80,000 வரை ஊதியம்…! மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…!

English Summary

While Mani Mekalai has left Vijay TV’s Cook with Komali show, the audio of Priyanka’s fight with Mani Mekalai has been released.

Next Post

இளைஞர்களே இந்த பாதிப்பு வராமல் இருக்க தினமும் இதை பண்ணுங்க..!! எவ்வளவு நல்லது தெரியுமா..?

Mon Sep 16 , 2024
An evening walk reduces stress for the day.

You May Like