Paris Olympics: பல வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியை மேலே உயர்த்த முயற்சித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற தனிநபர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரிஸில் நடைபெற்ற 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. செய்ன் நதிக்கரையில் தொடங்கிய ஒலிம்பிக்ஸ் திருவிழா, அந்நாட்டின் தேசிய மைதானத்தில் நிறைவடைந்தது. 32 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கள் நாட்டிற்காக பதக்கங்களை குவித்தனர்.
அந்தவகையில், பலர் பெருமைக்காக ஆசைப்பட்டாலும், ஒரு சிலர் மட்டுமே சிறப்பான சாதனையை அடைந்தனர். இந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற தனிநபர்கள், திறமை மற்றும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பையும் வெளிப்படுத்தினர்.
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து சிறந்த பத்து விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதுடன், பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளனர். இதில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸின் நீச்சல் வீரர் மார்கண்ட், அசாதாரணமான நீச்சல் ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலம் பெற்று அசத்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஹஸ்கே, 3 தங்கப்பதக்கங்கள் 2 வெள்ளி என மொத்தம் ஐந்து பதக்கங்கள் பெற்று 2 வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீரர் O’Callaghan 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று 3வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோல் அமெரிக்க ஜிம்னாஸ்ட் வீரர் பைல்ஸ் மற்றும் நீச்சல் வீரர் மெக்கின்டோஷ் ஆகியோர் தலா நான்கு தங்கங்களை தட்டிச் சென்றனர், இதன் மூலம் தனிநபர் பட்டியலில் 4வது இடத்தை பெற்றனர்.
ஜப்பானின் ஓகா, 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 6வது இடத்திலும், அமெரிக்காவின் தாமஸ், தென் கொரியாவின் WJ கிம் மற்றும் SH லிம் மற்றும் நியூசிலாந்தின் கேரிங்டன் ஆகியோர் 7வது இடத்தை பிடித்தனர். பதக்கப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சீனா, தனிநபர் பட்டியலில் டாப் 10க்குள் இடம்பெறாதது சற்று வருத்தமளிக்கிறது.
Readmore:‘பாரம்பரிய மயில் கறி செய்முறை’!. வைரலான வீடியோ!. யூடியூப்பரை கைது செய்து போலீஸ் அதிரடி!.