இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது..
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய கோட்டபய முதலில் மாலத்தீவுக்கு சென்றார்.. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பின்னர் சிங்கப்பூர் சென்றார்.. எனினும் சிங்கப்பூர் அரசாங்கம் அவர் “தனிப்பட்ட பயணம்” மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.. அவர் புகலிடம் கேட்கவில்லை, அவருக்கு எந்த தஞ்சமும் வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசுஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சிங்கப்பூரில் உள்ள கோட்டபய, அங்கிருக்கும் இலங்கை தூதரகம் வழியாக தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதை அடுத்து, அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ச ராஜினாமா செய்ததாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்..
இந்நிலையில் இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது.. இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பிக்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய அதிபரை தேர்வு செய்யப்பட உள்ளனர்.. குறைந்தது 113 எம்.பிக்களின் ஆதரவை பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கோட்டபயவின் பதவிக்காலம் முடியும் 2024 வரை பதவியில் இருப்பார்.. இலங்கை அரசியல் வரலாற்றில் 2-வது முறையாக நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..