fbpx

ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.. யார் இந்த ஷின்சோ அபே..? அவர் ஏன் சுடப்பட்டார்..?

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானின் நாரா நகரத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷின்சோ அபேவை சுட்டது தொடர்பாக 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினரால் யமகாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர். எனினும் அவர் சுடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

1954 இல் பிறந்த ஷின்சோ அபே, 2006 முதல் 2007 வரை மற்றும் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக இருந்தார். அவரும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரு நல்ல நட்பை பகிர்ந்து கொண்டனர். பிரதமர் மோடி பல சந்தர்ப்பங்களில் அவரை தனது நண்பர் என்று குறிப்பிட்டார்.

யார் இந்த ஷின்சோ அபே..? ஷின்சோ அபே லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக இரண்டு முறை இருந்தார். ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையில் தலைமை அமைச்சரவை செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய முக்கியமான பதவிகளையும் வகித்தார். ஒரு சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஷின்சோ அபே 1993 இல் ஜப்பானின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

2006 ஆம் ஆண்டு தொடங்கி ஜப்பானின் பிரதமராக அபே முதன்முதலில் பணியாற்றினார், ஆனால் பல சர்ச்சைகளைத் தொடர்ந்து ஒரு வருடம் பதவியில் இருந்து விலகினார். அவர் 2012 இல் மீண்டும் பிரதமரான பிறகு, அவர் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி, “அபெனோமிக்ஸ்” என்று பெயரிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைப் பயன்படுத்தினார்.

அக்டோபர் 2017 இல், அவர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் ஜப்பானின் மிக உயர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாக நான்காவது நான்கு ஆண்டு பதவிக்காலம் பெற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவரது நிர்வாகம் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில் அவரது புகழ் சரிந்தது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, குடல் நோய் உள்ளிட்ட கோளாறு காரணமாக உடல்நலக் கோளாறுகள் ஆகஸ்ட் 2020-ல் அவர் தனது பதவியை ராஜிமானா செய்தார்..

Maha

Next Post

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு..! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

Fri Jul 8 , 2022
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 காலிப் பணியிடங்களுக்கு 07.07.2022 முதல் 15.08.2022 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 2,180 மற்றும் புலனாய்வுத் துறையில் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு..! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

You May Like