fbpx

பூமியில் விழுந்த விண்கல் யாருக்குச் சொந்தம்? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு…

விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரும்பு விண்கல் தனியார் நிலத்தில் மீது விழுந்தது. அங்கு தான் ஒரு சிக்கல் உண்டானது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விழுந்த இந்த விண்கல்லின் உரிமையாளர் யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்துள்ளது. விண்கற்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பகுதியில் உள்ள பல கமெராக்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீண்ட நீதிமன்றப் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில் நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ​​மற்றொரு திருப்பமாக விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த முந்தைய தீர்ப்பையும் ரத்து செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை ஸ்வீடனின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா இல்லையா என்பதை புவியியலாளர்கள் முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Rupa

Next Post

உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் கடைசி இடத்தில் தங்கம்... முதலிடத்தில் இருப்பது?...

Tue Mar 26 , 2024
உலகில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் தங்கத்தை விடவும் பெருமதியான பொருட்கள் என்ன என்ன என்பது குறித்து இந்த பதிவில் பாப்போம். ஃபிரான்சியம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி (இந்திய மதிப்பின் படி) ஆகும். குறித்த […]

You May Like