அமெரிக்காவின் மியாமி டே கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்த்ரா ஜிமினெஸ் (44). இவர், தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய காதலர் வேறு பெண்களைப் பார்ப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காதலி ஜிமினெஸ், காதலரின் கண்ணில் வெறிநாய்க்கடிக்குச் செலுத்தப்படும் ஊசியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
ஏற்கனவே தாம் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த காதலர், உடனடியாக போலீசுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அங்கு விரைந்து வந்து, அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதற்கிடையே தப்பியோடிய காதலி ஜிமினெஸ், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் படுத்து உறங்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது, தன் காதலரின் கண்ணில் தாம் ஊசியால் குத்தவில்லை எனவும், அவரே தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.