மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்தனர்.. மேலும் “ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ உரிமை உண்டு. ஒரு தனி நபருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், அது ஒரு நபரை மிகவும் இழிவாகவும் அவமானப்படுத்துவதாகவும் இருக்கும்.
கணவரின் வாதம் என்னவென்றால், சண்டை வரும் போதெல்லாம். , மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவனையும் அவன் குடும்பத்தையும் அவமானப்படுத்துவார். கணவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிரான மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள், நிச்சயமாக கொடுமைக்கு சமம்.. எந்த ஒரு நபரும் தொடர்ந்து கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது,” என்று தெரிவித்தனர்..
குடும்பநல நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என்றும், இந்து திருமணச் சட்டத்தின் விதிகளின்படி கணவர் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளார் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், அந்தப் பெண் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் அன்பாக நடந்துகொள்ளவில்லை.. மேலும் அந்த ஆண் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.. எனவே அவர்களுக்கு விவாகரத்து வழங்குவதாக உத்தர்விட்டது..