கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி வரம்பு குறித்து முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) கூட்டம் இன்று நடைபெற உள்ளது….
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47வது ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த மாதம் சில சரக்குகள் மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை மாற்றியமைக்க முடிவு செய்தது, இதில் முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விகிதமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது..
ஆன்லைன் கேமிங், கேசினோக்கள், குதிரைப் பந்தயம் குறித்த அமைச்சர்கள் குழு, இன்று விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க உள்ளது.. ஆன்லைன் கேமிங்கிற்கு விளையாட்டில் பங்கேற்பதற்காக வீரர் செலுத்தும் போட்டி நுழைவுக் கட்டணம் உட்பட முழு மதிப்பிலும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ரேஸ் கோர்ஸ்களைப் பொறுத்தவரை, மொத்தப் பந்தயங்களில் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு, புக்மேக்கர்களிடம் வைக்கப்படும் பந்தயங்களின் முழு மதிப்பிலும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளது. கேசினோக்களில், ஒரு வீரர் கேசினோவில் இருந்து வாங்கும் சிப்/காசுகளின் முழு முகமதிப்புக்கும் வரி விதிக்கப்படும் என்று அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளது.. இதுகுறித்து விவாதிப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் ஆன்லைன் கேமிங்கிறாக ஜிஎஸ்டி உயர்வு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது..