திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவருக்கு தனிகைவேல் என்ற கணவரும், 24 வயதான தேவி என்ற மகளும் உள்ளனர். முனியம்மாள், தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். முனியம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகள் தேவி, டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் வீட்டில் தங்கி மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக இவருக்கு எந்த பணியும் இல்லாததால், இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் திடீரென மாயமாகி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த 19 வயதான சாய்ராம் என்ற இளைஞனும் காணவில்லை என்று செவ்வாப்பேட்டை போலீசாருக்கு புகார் வந்துள்ளது. காணாமல் போன இருவரும் உறவினர்கள் என்பதை தெரிந்து கொண்ட போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது, 19 வயதான சாய்ராமும், சித்தி முறை கொண்ட 24 வயதான தேவியும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், தேவியின் தாய் மாமனான மணியும் தேவியும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவதும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக தேவியின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சோழவரம் அருகே காரனோடை பகுதியை சேர்ந்த விஜய், என்ற இளைஞரும் தன்னை தேவி ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து, சுமார் 5 லட்சம் வரை ஏமாற்றி பணம் மற்றும் பொருகளை வாங்கியதாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கொண்ட செல்போனோடு காவல் நிலையத்திற்கு வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் திகைத்துப் போன போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், செவிலியராக பணிபுரிந்து வந்த தேவி என்ற பெண் அடுத்தடுத்து சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருள்களை பெற்றுக் கொண்டதாக, சாய்ராம் தரப்பில் வந்த வழக்கறிஞர்கள் புகைப்படங்களுடன் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், போலீசார் ஒழுங்காக அவரவர் பெற்றோர்களுடன் செல்லுங்கள் என தேவி, மற்றும் சாய்ராமிடம் கூறியுள்ளனர். முதலில், இதற்க்கு இருவரும் மறுத்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் உஷாரான தேவி, தனது தாயுடன் செல்கிறேன் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இருவரது தரப்பிலும் சமசராச பேச்சுவார்த்தை ஏற்படுத்தி அவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். இதையடுத்து, தேவி தான் கட்டியிருந்த தாலியை, சாய்ராமின் உறவினரிடம் கழட்டி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
Read more: சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய ஃபெஞ்சல் புயல்..!! பலத்த காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை..!!