கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா(17) என்ற மகள் இருக்கிறார் இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் சக்கரவர்த்தி பெயிண்டிங் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியிலிருந்து ஜெகதீஸ்வரி நாள்தோறும் மாலை 4:30 மணி அளவில் அழைத்துச் செல்வார் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி நேற்று மாலை 4:30 மணி ஆனப்பின்னரும், அவர் மகளை அழைத்துச் செல்வதற்கு பள்ளிக்கு வரவில்லை. ஆகவே கார்த்திகா மாலை 5.30 மணி வரையில் காத்திருந்தும், தன்னுடைய தாய் வராததால் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் வீட்டின் படுக்கை அறையில் தன்னுடைய தாயார் உயிரிழந்த நிலையில், கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளார் கார்த்திகா. அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கழுத்து நெறிக்கப்பட்டு ஜெகதீஸ்வரி இறந்திருக்கலாம் என்றும், 4️ சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் நகை திருடப்பட்டு இருக்கிறது என்ற விபரமும் தெரிய வந்துள்ளது. உதவி ஆணையர் பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நகைக்காக பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதீஸ்வரியின் கணவர் சக்கரவர்த்தி தெரிவித்ததாவது, தான் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் தன்னுடைய மகள் மாலை 6.30 மணி அளவில் போன் செய்து அம்மா இறந்து கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார் மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் உள்ளிட்டவை திருடு போய் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.